குழந்தையுடன் மாடியில் இருந்து குதித்த தந்தை – அதிரவைக்கும் காரணம் !

Published on: February 27, 2020
---Advertisement---

f3db8d73756f6e210118e120293a1609

சென்னை, மதுரவாயலில் திருப்பதி என்ற நபர் தன் குழந்தையுடன் மொட்டை மாடியில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த திருப்பதி என்பவர், அங்குள்ள குடோன் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வந்தார். அவருக்கு சுனிதா என்ற மனைவியும், ஒரு ஆண்குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சில ஆண்டுகளாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட திருப்பதி அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை அவர் தன் மகளோடு மாடிக்கு சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காதவிதமாக தன் மகளோடு மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அவர்களை சோதித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாகவும், திருப்பதி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சொல்லியுள்ளனர். இப்போது திருப்பதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment