தந்தை வெற்றி : மகிழ்ச்சியில் திளைத்த மகன் அதிர்ச்சி மரணம்

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தந்தையின் மகன் மகிழ்ச்சியில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

beb86ddeefd3df85605fec5abb335f0b

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் கிராமங்களில் வசித்தி வரும் சேர்ந்த பலரும் வெற்றி பெற்றனர். அவர்களின் வெற்றியை அவர்களின் குடும்பதினர் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டம் சோக நிகழ்வாக மாறியுள்ளது.

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊகாயனூர். இங்கு சுப்பிரமணியம் என்பவர் போட்டியிட்டார்.  இவருக்காக இவரது மகன் கார்த்திக் அவரின் நண்பர்கள் பிரச்சார பணிகளை சிறப்பாக செய்திருந்தனர். எனவே, முடிவை தெரிந்து கொள்ள அவர்கள் அனைவரும் பூத் வாசலிலேயே காத்திருந்தனர். 

வாக்கு எண்ணிக்கை துவங்கியதும், தனது தந்தை பெற்ற ஓட்டு விபரங்களை அடிக்கடி கேட்டு தெரிந்து கொண்டிருந்தார் கார்த்தி. அப்போது அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இறுதியில் அவரின் தந்தை 18 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு துள்ளிக்குதித்த கார்த்தி செல்போனில் தனது தாயிடம் தகவல் தெரிவித்தார். அதன்பின் நண்பர்களுன் ஆட்டம் பாடம் என துள்ளிக்குதித்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தந்தை வெற்றி பெற்ற நிலையில், மகன் மரணமடைந்த சம்பவம் அவரின் குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *