
சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் தன் மனைவியோடு ஏற்பட்ட தகராறால் பிறப்புறுப்பை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் பாபு மற்றும் தேவி. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான பாபு அடிக்கடி தனது மனைவியோடு சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் அவரை விவாகரத்து செய்யும் முடிவில் இருந்துள்ளார் தேவி.
புத்தாண்டு தினமான டிசம்பர் 31 ஆம் தேதி வழக்கம்போல பாபு குடித்துவிட்டு வந்து பிரச்சனை செய்ய, தன் தாய் வீட்டுக்கு செல்வதாக பாபுவிடம் சொல்லியுள்ளார். இதனால் மனமுடைந்த பாபு சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தனது பிறப்புறுப்பை வெட்டிக்கொண்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் இப்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



