மிரள வைக்கும் சண்டைக் காட்சி – ‘வலிமை’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்…

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகமல் உள்ளது. இப்படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் ரசிகர்கள் கெஞ்சாத குறையாக கேட்டு சலித்துவிட்டனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக் காட்சி தொடர்பான ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது. தற்போது ஒரு வீடியோவும் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
adminram