More

திரைப்படமாகும் ஐதராபாத் பெண் டாக்டர் கொலை: இயக்குனர் யார் தெரியுமா?

ஐதராபாத்தில் பெண் டாக்டர் திஷா என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4 கொடிய கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பின்னர் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து ஏற்பட்ட நிலையில் நான்கு குற்றவாளிகளும் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Advertising
Advertising

இந்த நிலையில் பல உண்மை சம்பவங்களை திரைப்படமாக்கி உள்ள பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா அவர்கள், ‘திஷா என்ற பெயரில் இந்த சம்பவத்தை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

நிர்பயா படுகொலைக்குப் பின்னர் நாட்டில் நடந்த மிகக் கொடூரமான படுகொலை திஷா படுகொலைதான். பாலியல் வன்கொடுமையாளர்கள் திருந்துவதாக தெரியவில்லை. தாங்கள் செய்த தவறை திருத்திக் கொள்வதாக மட்டுமே தெரிகிறது

எனது திஷா திரைப்படம் பாலியல் வன்கொடுமையாளர்களின் மனதை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் இனிமேல் பாலியல் வன்கொடுமை செய்ய அஞ்சுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்

ராம்கோபால் வர்மாவின் ஒவ்வொரு திரைப்படமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த படமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Published by
adminram

Recent Posts