படப்பிடிப்பு முடியும் முன்னரே முடிந்தது வியாபாரம்: மாஸ்டர் காட்டிய கெத்து

ஒரு படத்தை தயாரித்து முடித்து விட்டு அந்த படத்தை பிசினஸ் செய்வதற்குள் அந்த தயாரிப்பாளருக்கு போதும் போதுமென்றாகி விடும் நிலையே பல தயாரிப்பாளருக்கு உள்ளது.  ஆனால் விஜய் படம் மட்டும் அதற்கு விதிவிலக்கு. விஜய் படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீதம் முடிவதற்குள்ளாகவே அந்த படத்தின் மொத்த வியாபாரமும் முடிந்துவிடும் என்பது கடந்த கால வரலாறு. அந்த வகையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு 60% மட்டுமே முடிவடைந்திருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 90% முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

மாஸ்டர்  படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லலித் என்பவர் வாங்கி உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் கேரளா கர்நாடக ஆந்திர மாநில ரிலீஸ் உரிமைகளின் வியாபாரம் அமோகமாக விற்பனையாகி விட்டது.

மேலும் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவியும் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனமும் பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை யூனிட்டைட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து பெற்றுள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்னும் இந்த படத்தின் வட இந்திய உரிமையின் வியாபாரம் மட்டுமே நடைபெற இருப்பதால் கிட்டத்தட்ட 90% வியாபாரம் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram