சிம்பு நடிப்பில் சக்கை போடு போட்ட படங்கள்

சிம்புவை விரல் வித்தை நடிகர் என்பர். அவரது ஆரம்ப காலப்படங்களில் விரல்களை ஆட்டியே தனது ஸ்டைலாக்கியவர். அதனால் தான் அவ்வாறு சொல்வார்கள். இவர் தனது சக நடிகர் தனுஷ_க்கு போட்டியாக வளர்ந்து வந்தார். இவரது படங்களைப் பார்க்கும்போது ஸ்டைல் தூக்கலாக இருக்கும். 

குழந்தை நட்சத்திரமாக நடித்து பல படங்களில் பட்டையைக் கிளப்பினார். 2002ல் தான் முதன்முறையாக விஜய டி.ராஜேந்தர் இயக்கிய படமான காதல் அழிவதில்லை படத்தில் நடித்தார். 

2006ல் இவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது. 

நடிகர் மட்டுமல்லாமல், இவர் தனது தந்தையைப்போல பின்னணிப்பாடகர், திரைக்கதை, எழுத்தாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்துள்ளார். 

இவர் நடித்த படங்களில் காதல் அழிவதில்லை, தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, கோவா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. 

இவற்றுள் முற்றிலும் மாறுபட்ட சில படங்களைக் காணலாம். 

காதல் அழிவதில்லை 

2002ல் டி.ராஜேந்தர் இசை அமைத்து இயக்கிய படம். சிலம்பரசன் இந்தப் படத்தில் தான் அறிமுகமானார். உடன் சார்மி, மதன்பாப், கருணாஸ், வெண்ணிற ஆடை மூர்த்தி, சீதா, தாமு, மோனிகா, ஷர்மிலி, நளினி, பாண்டு, சந்தானம், ராதாரவி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். உஷா டி.ராஜேந்தர் தயாரித்தார். 

பார்க்காத போது போது, பிள்ளையார் சுழி, காதல் அழிவதில்லை, கிளிண்டன் மகளோ, ஜோதிகாவா, மாரா மாரா, எவன்தான், என் மனசில் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

கோவில் 

2003ல் ஹரி இயக்கத்தில் வெளியான படம் கோவில். சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு, ராஜ்கிரண், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த படம். பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. புயலே…புயலே.., அரளி விதையில், காலேஜிக்கு, காதல் பண்ண, கொக்கு மீன, சில்லு சில்லு ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன. 

மன்மதன் 

2004ல் ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் வெளியான படம். சிலம்பரசன் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம். ஜோதிகா, கவுண்டமணி, சந்தானம், சிந்து துலானி மற்றும் பலர் நடித்தனர். எஸ்.கே.கிருஷ்ணகாந்த் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. ஒரு வருடம் தாண்டி ஓடி வெற்றி வாகை சூடியது. தெலுங்கில் மன்மதா என்ற பெயரிலும், கன்னடத்தில் மதனா என்ற பெயரிலும் ரீமேக் ஆனது. இப்படத்தில் தத்தை தத்தை, மன்மதனே நீ, ஓ மாஹீரே, வானமென்ன, என் ஆசை மைதிலியே, காதல் வளர்த்தேன் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தின் திரைக்கதையை சிலம்பரசன் தான் எழுதினார். 

தொட்டி ஜெயா

2005ல் துரை இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியானது. சிலம்பரசன், கோபிகா, பிரதீப் ராவத், வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஒரு தாதாவிடம் அடியாள் வேலை பார்க்கும் ஒருவன் தாதாவின் மகளை யார் என்று தெரியாமல் காதலித்து விடுகிறான். அதனால் தாதாவுக்கும் அவனுக்கும் இடையே ஏற்படும் மோதல் தான் படத்தின் கதை. அடியாள் வேடத்தில் சிம்புவும், தாதாவின் மகளாக கோபிகாவும் நடித்துள்ளனர்.

சிம்பு அடியாளாக மாறுவது, சிம்புவின் மீது கோபிகாவுக்கு காதல் வருவது, தன்னை 15 வருடமாக வளர்த்த தாதாவை சிம்பு எதிர்த்து நிற்பது போன்றவற்றை உரிய காரணங்களுடன் படமாக்கி உள்ளார் இயக்குனர் துரை. அச்சு வெல்லம் கரும்பே, தொட்டா பவருடா, உயிரே என் உயிரே, யாரி சிங்காரி..ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.   

விண்ணைத் தாண்டி வருவாயா 

2010ல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன், திரிஷா மற்றும் கணேஷ் ஜனார்த்தனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கணேஷ் ஜனார்த்தனன் இப்படத்திற்கு பிறகு விடிவி கணேஷ் என அழைக்கப்படுகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இந்துவான கார்த்திக்கிற்கும், மலையாள கிறிஸ்தவரான ஜெஸ்ஸிக்கும் இடையிலான மென்மையான காதல். அதனால் அவர்களின் குடும்பங்களில் உருவாகும் பிரச்சனைகள், இருவரின் மனநிலையை விவரிக்கும் நிகழ்வுகள் என கதை நகர்கிறது.

இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. ஓமனப் பெண்ணே, அன்பில் அவன், விண்ணைத் தாண்டி வருவாயா, ஹோசானா, கண்ணுக்குள் கண்ணை, மன்னிப்பாயா, ஆரோமலே…. ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றவை. 

இது நம்ம ஆளு 

கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான காமெடி படம் இது நம்ம ஆளு. இது தாய்க்குலங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்ற படம். 2016ல் சிலம்பரசன், நயன்தாரா நடித்து வெளியான படம். இப்படத்தில் டி.ஆர்.குறளரசன் இசை அமைத்தார். இவர் சிலம்பரசன் தம்பி. டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் படத்தைத் தயாரித்தனர். சிலம்பரசன், ஆண்ட்ரியா, நயன்தாரா, சூரி, ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்தனர். காதகா, கிங் காங், கண்ணே உன் காதல், மாமன் வெயிட்டிங், ஒரு தலை ராகம் ஆகிய பாடல்கள் இடம்பெற்றன. 

Published by
adminram