பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து: தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன

டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் ஏற்பட்டுள்ள தீவிபத்தால் தலைநகர் பெரும் பரபரப்பில் உள்ளது

டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியிலுள்ள பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமரின் இல்லத்தில் ஏற்பட்டுள்ள தீவிபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் டெல்லியில் உள்ள 9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க  விரைந்துள்ளனர். சற்றுமுன் வெளியான தகவலின்படி பிரதமர் வீட்டில் சிறிய அளவில்தான் தீவிபத்து ஏற்பட்டதாகவும் , தீ உடனே அணைக்கப்பட்டதாகவும், இந்த தீ விபத்தால் எந்தவித சேதமும் இல்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram