மத்திய அரசு தாக்கல் செய்து வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்த போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையாகவும் மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேருந்துகளுக்கும் ரயில்களுக்கும் தீ வைக்கப்பட்டது என்பதும்,. போராட்டம் கலவரமாக மாறி உள்ளதை சுப்ரீம் கோர்ட்டை கண்டித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி அவர்கள் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு ஒரு அறிவுறுத்தலை கூறியுள்ளார். போராட்டத்தின் போது ரயில் உள்ளிட்ட சொத்துக்களை சேதப்படுத்தவோர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று கூறியுள்ளார்
ஒரு மத்திய அமைச்சரே போராட்டம் செய்பவர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டியது அரசின் கடமை என்பதும் குறிப்பிடத்தக்கது
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…
கங்குவா படம்…
நடிகர் சல்மான்…