உறுதியானது ’மாநாடு’ வில்லன்: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

Published on: January 18, 2020
---Advertisement---

e82ece3669c5bc8f6f34d3d9b907a420

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள ’மாநாடு’ படத்தின் அப்டேட்களை நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வழங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார் என்பதும் பாரதிராஜா, எஸ்.ஏ சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் நடிகர் யார் என்பது குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது 

இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டாலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகவில்லை. இந்த நிலையில் அரவிந்தசாமிதான் இந்த படத்தின் வில்லன் என்ற தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தனி ஒருவன் போல் வில்லன் கேரக்டருக்கு அழுத்தமான கேரக்டர் என்பதால் இந்த படத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தலைவி படத்தில் அரவிந்த்சாமி சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் அவர் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment