முதல்நாள் திருமணம்; அடுத்தநாள் மருத்துவமனையில் அனுமதி ! – 75 வயது நடிகருக்கு நேர்ந்த பரிதாபம் !

பிரபல பெங்காலி நடிகரான திபாங்கர் தே திருமணம் ஆன அடுத்த நாளே மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்க மொழியின் பிரபல நடிகர்களில் ஒருவர் திபாங்கர் தே. இவருக்கு வயது 75. இவரும் நடிகை டோலான் ராய் ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதையடுத்து இருவரும் கடந்த 16 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். குடும்பத்தினர் சூழ கோலாகலமாக நடந்த அந்த திருமண விழாவை அடுத்த மறுநாள் திபாங்கர் தே மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram