கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாருக்கு போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போனார். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரை அடுத்து விரைந்து தேடிய போலிஸார் மறுநாள் காலை உடலில் காயங்களோடு சடலமாக அவரை மீட்டனர். விசாரணையில் அவர் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இது சம்மந்தமான வழக்கு கோவை போக்ஸோ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வாசிக்கப்பட்டது.
குற்றவாளி என நிருபிக்கப்பட்ட சந்தோஷுக்கான தீர்ப்பில் ’இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவுபடி சாகும் வரை தூக்கு தண்டனை, போஸ்கோ 5L, 5M பிரிவுகளின்படி ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம், இந்திய தண்டனை சட்டம் 201ன்படி 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1000 அபராதம்’ என வாசிக்கப்பட்டது. கோவையில் போக்ஸோ தனி நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்ட பின் அளிக்கப்பட்ட முதல் தூக்குத்தண்டனையாக இந்த தீர்ப்பு அமைந்தது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…