More

முதலில் அக்காவுக்கு ப்ரபோஸ்.. பின்னர் தங்கைக்கு- கொலையில் முடிந்த முக்கோணக்காதல்!

நாமக்கல் அருகே கொசவம்பட்டி தேவேந்திர நகரப் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் என்ற கல்லூரி மாணவர். ராகுல் தந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் ப்ரபோஸ் செய்துள்ளார்.  ஆனால் அவர் ஏற்காததால் அதன் பின்னர் அவரது தங்கையைக் காதலிக்க ஆரம்பித்துள்ளார். அந்த பெண்ணும் அவரைத் திரும்ப காதலித்த நிலையில் அவரின் அக்கா காதலுக்குக் குறுக்காக நின்றுள்ளார்.

Advertising
Advertising

இதனால் கோபமான காதலர்கள் அக்காவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து காதலனை வர சொல்லி அக்காவின் கழுத்தை நெறித்துள்ளனர். பின்னர் அவரின் கை நரம்பை வெட்டிவிட்டுள்ளனர். இதையடுத்துக் காதலன் சென்று விட பெற்றோருக்கு போன் செய்து அக்கா தற்கொலை முயற்சி செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவர்கள் வந்து மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் அக்கா உயிரிழந்துள்ளார். தற்கொலை வழக்காக போலீஸார் இதைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் பிரேதப் பரிசோதனை முடிவில் கொலை செய்யப்பட்ட பெண் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் இறந்த நேரத்தில் வீட்டில் இருந்த தங்கையின் போனை சோதனை செய்ததில் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts