
வெற்றிமாறன் வரிசையாக சூரி, சூர்யா மற்றும் விஜய் ஆகியோரை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
வெற்றிமாறனின் அசுரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று தனுஷின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இதையடுத்து வெற்றிமாறனை அழைத்து சூர்யா, விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் பேசினர்.
இதில் சூர்யா மற்றும் விஜய்க்கு அவர் சொன்ன கதைகள் பிடித்திருப்பதால் அவர்களோடு இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக சூரி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். அதன் பின் தாணு தயாரிக்கும் சூர்யா படத்தை இயக்க இருப்பதாகவும் அதன் பின் விஜய்யை வைத்து படம் இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.அதனால் இன்னும் 3 வருடங்களுக்கு வெற்றிமாறன் பிஸியாக இருப்பார் என சொல்லப்படுகிறது.



