ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், இசை வெளியீடு, மோஷன் போஸ்டர், டீசர், ஆகியவை எல்லாம் கடந்த சில வருடங்களாகவே கோலிவுட் திரையுலகில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த 20 வருடங்களுக்கு முன்னால் நடித்த நடிகர்களின் படங்களுக்கு ட்ரெய்லர் மட்டுமே வெளியாகும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் எம்ஜிஆர் படம் ஒன்றின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் முதலாக நாளை வெளியாக உள்ளது என்பதால் எம்ஜிஆர் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ’தலைவி’ என்ற படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே
இந்த கேரக்டரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. நாளை எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய கேரக்டரின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாக இருப்பதால் எம்ஜிஆரை இப்போதும் வணங்கி வரும் கோடிக்கணக்கான அவரது ரசிகர்களும் தொண்டர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வருகிறார்.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…