திரிஷ்யம் - 2 ஸ்கிரிப்டுக்கு 5 ஆண்டுகள்... டைரக்டர் சொன்ன காரணம்!
மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் படம் மல்லுவுட்டில் பெரிய ஹிட்டடித்தது. திரில்லர் ஜானரில் வெளியான அந்தப் படம் தமிழில் கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் பாபநாசமாகவும், ஹிந்தியில் அஜய்தேவ்கான், ஸ்ரேயா, தபு ஆகியோர் நடிப்பில் அதே பெயரிலும் படமாக்கப்பட்டன. மேலும், அந்தப் படம் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் வெளியாகி பெரும் ஹிட்டடித்தது.
இந்தநிலையில், படத்தின் சீக்வெலாக திரிஷ்யம் - 2 உருவாகியிருக்கிறது. இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைமில் வரும் 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய இயக்குனர் ஜீத்து ஜோசப்,"திரிஷ்யம்-2 ஸ்கிரிப்ட் முழுமையாகத் தயாராக 5 ஆண்டுகள் பிடித்தது. படத்தின் ஸ்கிரிப்டைக் காட்டி அது எனது குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என அனைவருக்கும் திருப்தியான பிறகே படத்தின் ஸ்கிரிப்டை இறுதி செய்தேன்’’ என்று பேசியிருக்கிறார்.
இந்தநிலையில், திரிஷ்யம் - 2 படத்தின் தியேட்டர் ரிலீஸுக்கும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. சமூக வலைதளமான டிவிட்டரில் ரசிகர்கள் கேள்விக்குப் பதிலளித்த மோகன்லால் தியேட்டர் ரிலீஸ் பற்றி ஹிண்ட் கொடுத்து பேசினார். ஆனால், தியேட்டர் ரிலீஸ் பற்றி அவர் உறுதியான தகவலைச் சொல்லவில்லை.