கள்ளக்காதலுடன் உல்லாசம் ; நேரில் கண்ட 5 வயது மகன் : இறுதியில் நேர்ந்த சோகம்

மதுரை மாவடம் கல்லுப்பட்டி அருகேயுள்ள குச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஆனந்தஜோதி. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஜீவா என்கிற மகனும், 3 வயதில் லாவண்யா ஒரு மகளும் உள்ளனர். 

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். போலீசாரின் விசாரணையில், அவர்களின் சந்தேகம் ஆனந்த ஜோதி மீது திரும்பியது. ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக்கொண்ட ஆனந்த ஜோதி கூறியது போலீசாருக்கு தூக்கி வாரிப்போட்டது.

ஆனந்த ஜோதிக்கு அப்பகுதியியை சேர்ந்த வாலிபர் மருதுபாண்டியனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை சிறுவன் ஜீவா பார்த்துவிட்டான். எனவே, எங்கே உண்மையை தனது தந்தையிடம் கூறிவிட்டால் என்ன செய்வது என யோசித்த மருதுபாண்டி ஜீவாவை கொலை செய்துவிடும்படி கூறியுள்ளான். அதைத் தொடர்ந்து சம்பவத்தன்று ஜீவாவின் முகத்தை தலையனையால் அமுக்கி ஆனந்தஜோதி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். எனவே, அவரையும், மருதுபாண்டியனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Published by
adminram