மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன் லால் தன் மகளை தான் இயக்கும் படத்தில் உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டுள்ளார்.
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் 60 வயதிலும் தன் படங்கள் மூலம் வசூல் சாதனை செய்து வருகிறார். இந்நிலையில் இப்போது இயக்கத்தில் இறங்கியுள்ள அவர் ப்ரோஸ்: கார்டியன் ஆப் காமா’ஸ் டிரஸ்சர் என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் அவரது மகள் விஸ்வாமா உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறார்.
ஏற்கனவே மோகன் லாலின் மகன் பிரணவ் சினிமாக்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக மகளை சினிமாவில் இயக்குனராக உருவாக்கும் முனைப்பில் இருக்கிறார் மோகன் லால்.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…