மகளின் தோழியுடன் கள்ள உறவு ; ஆபாச புகைப்படத்தை காட்டி மிரட்டியதால் கொலை : சென்னையில் அதிர்ச்சி

சென்னை துறைமுகம் விளையாட்டு மைதானம் அருகே ரத்த வெள்ளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு சடலம் கிடந்தது. போலீசாரின் விசாரணையில் அவர் திருவெற்றியூரில் வசிக்கும் சேகர் என்பது தெரிய வந்தது. 

தொடர் விசாரணையில், 5 வருடங்களுக்கு முன் சேகர் தனது மகளின் தோழி ஒருவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். அப்பெண்ணுடன் அவர் பல இடங்களில் சுற்றியதாக தெரிகிறது. சமீபத்தில் அப்பெண்ணுக்கு வேறு ஆணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சேகர், நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவேன் என அப்பெண்ணிடம் குடும்பத்தினரை மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், சேகரின் பிறந்தநாளை கொண்டாட அவருடன் அப்பெண் நேற்றிரவு அடையாறு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் துறைமுகம் விளையாட்டு மைதானம் அருகே சென்றுள்ளனர். அங்கு அவரின் கண்களை மூட சொன்ன அப்பெண் பெவி குயிக்கை அவரின் கண்ணில் கொட்டிவிட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் அப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகின்றனர்.

Published by
adminram