என்னை மன்னித்து விடுங்கள் – அசுரன் விழாவில் வெற்றிமாறன் நெகிழ்ச்சி

இந்நிலையில், இப்படத்தின் 100வது நாள் விழாவில் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.  இப்பட விழாவில் பேசிய இப்பட இயக்குனர் வெற்றி மாறன் ‘இப்படம் வெற்றி பெற்றதற்கு மக்களிடமிருந்த வெற்றியே முக்கிய காரணம். எனக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு விருப்பமில்லாத ஒன்றை என்னை செய்ய வைக்க முடியாது. 

எனக்கு மிகவும் கோபம் வரும். அந்த கோபத்தை என் உதவியாளர்களிடம் காட்டுவேன். அது என் இயலாமை. இதை அவர்களிடமே தெரிவித்துள்ளேன். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அசுரன் படத்தில் தனுஷ் நடிப்பு அபாரமானது. அவர் மிகவும் சிறப்பாக நடித்தார்’ என வெற்றி மாறன் பேசினார்.

Published by
adminram