மறந்து போனத இவரே பேசுவராம்.. இவரே மறக்கவும் சொல்லுவாராம்… ரஜினியை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசிய ரஜினி பெரியார் குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘1971ம் ஆண்டு சேலத்தில் ஊர்வலத்தில் நடந்த சம்பவம் பற்றி நான் கேள்விப்பட்டதையும் பத்திரிக்கையில் வந்ததையும் வைத்து பேசினேன். ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் செருப்புமாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். இதுபற்றி அவுட்லுக் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது. அதைக்கண்டுதான் நான் பேசினேன். எனவே, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது மறுக்க வேண்டிய விஷயம் அல்ல. மறக்க வேண்டிய விஷயம் எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உண்மையில் ரஜினி துக்ளக் பத்திரிக்கையைத்தான் காட்டியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வேறு பத்திரிக்கையில் படித்தேன் என்கிறார் என அவரை விமர்சித்து வருகின்றனர்.

Published by
adminram