More

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் மிஸ் இந்தியா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதி, இரவு பகல் பார்க்காமல் பிஸியாக ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவருடைய கால்ஷீட் ஃபுல் என்கிறார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா என சிவகார்த்திகேயனை இயக்கிய பொன்ராகும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி இணைகிறார். 

Advertising
Advertising

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் கேரக்டரில் நடிப்பதாகத் தெரிகிறது. இதற்கேற்ப சன்பிக்சர்ஸ் வெளியிட்ட டீசரும் அதைப் பிரதிபலித்தது.

இந்தநிலையில், பொன்ராம் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியுடன் திருச்சிப் பொண்ணு அனுகீர்த்தி வாஸ் என்ற மாடல் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இவர் கடந்த 2018ம் ஆண்டு மிஸ் ஃபெமினா இந்தியாவாகப் பட்டம் வென்றவராவார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

Published by
adminram

Recent Posts