தொலைத் தொடர்புத்துறையில் ஜியோ அறிமுகமானதிலிருந்தே மற்ற நிறுவனங்கள் காலியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஏர்செல் நிறுவனம் தனது கடையை இழுத்து மூடிக்கொண்டு ஊருக்கு சென்று விட்டது
இந்த நிலையில் ஜியோவுடன் ஓரளவு தாக்குப் பிடித்து நிற்பது ஏர்டெல் மட்டுமே. இருப்பினும் இரு நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதால் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது
இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு புத்தாண்டை அடுத்து 2020 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் பல புதிய சலுகைகள் கிடைக்கும் என ஜியோ அறிவித்துள்ளது. இதன்படி 2020 ஆம் ஆண்டு 20 ரூபாய்க்கு முதல் ரீசார்ஜ் செய்தால் ஒரு ஆண்டு முழுவதற்கும் இலவச அழைப்புகள் மற்றும் எண்ணிலா எஸ்எம்எஸ்கள் கிடைக்கும் என்றும் அதுமட்டுமின்றி தினமும் 1.5 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும் என்று ஜியோ அறிவித்துள்ளது
இதேபோல் 2020 ரூபாய்க்கு ஜியோ போன் வாங்கினால் அதற்கும் ஆண்டு முழுவதும் இலவச அழைப்புகள் கிடைக்கும் என்றும், தினமும் 0.5 ஜிபி டேட்டா இலவசம் என்றும் அளவில்லா எஸ்எம்எஸ் இலவசம் என்றும் அறிவித்துள்ளது
ஒரு ஆண்டுக்கு 2020 ரூபாய் ரீசார்ஜ் என்பது ஒரு மாதத்துக்கு 200 ரூபாய் கூட இல்லை என்பதால் இந்த சலுகையை பெற ஜியோ வாடிக்கையாளர்கள் முண்டியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…