இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 1000 ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் இன்று காலை வரை 67 பேர் கொரொனா பாதித்த நோயாளிகளாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
கொரோனா நோயை தடுக்க தேவைப்படும் நேரத்தில் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால்,சில இடங்களில் முகக்கவசம் கடைகளில் கிடைப்ப்பதில்லை.
இந்நிலையில், விழுப்புரம் அருகேயுள்ள கள்ளக்குறிச்சியில் முகக்கவசம் தட்டுப்பாடு நிலவுவதால் தியாகதிருவம் பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்கிற டெய்லர் தனது சொந்த பணத்தில் துணி வாங்கி முகவசத்தை தைத்து அப்பகுதி மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார். ஒருநாளைக்கு 500 முகவசங்களை தைத்து கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். அவரின் பணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்த டெய்லர் பிரகாஷ் ‘ மக்களின் உயிர் மகத்தானது அதன் பாதுகாப்பதில் ஒரு சதவீதமாவது எனது பங்கு இருக்குமேயானால் அதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் எனக்கு இல்லை ’ எனக்கூறினார்.
விடாமுயற்சி படத்தின்…
Gossip: தமிழ்…
Naga chaitanya…
நடிகை சமந்தா…
Jayam ravi:…