நடிகை ‘கயல்’ ஆனந்தி வீட்டில் விசேஷம்.. ரசிகர்கள் வாழ்த்து..

by adminram |

07b3eff75b9f1acdefdc385247d5cc71

கயல் திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆனந்தி. அதன்பின் திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி வீரன், கடவுள் இருக்கான் குமாரு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட 20 படங்களில் நடித்துள்ளார்.

7ae936cbabf61967863f06f1859e2813

கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி துண இயக்குனர் சாக்ரட்டீஸ் என்பவரோடு அவருக்கு திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவல் கட்டுப்பாடுகளில் அவரின் திருமணத்தில் திரையுலகினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.

d9e5ca5eb300136edca1d4ecf8d51396

இந்நிலையில், ஆனந்தி தற்போது அம்மாவாக போகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. அவர் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் அவருக்கு வளைகாப்பு நடத்த அவரின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே, திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Story