அஜித், விஜய் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அந்தந்த ரசிகர்களிடம் அந்த படம் வெளியாகும்வரை திட்டு வாங்கிக் கொண்டே இருப்பார்கள் என்பது தெரிந்ததே. படம் பூஜை போட்ட நாளிலிருந்து அந்த படத்தின் அப்டேட்களை கொடுங்கள் என்று தயாரிப்பாளரை நச்சரிக்க தொடங்கி விடுவார்கள். சமீபத்தில் விஜய்யின் ‘பிகில் படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாதி இந்த சங்கடத்தை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அஜீத் நடித்து வரும் ’வலிமை’ படத்தை தயாரித்த வரும் போனிகபூரை தினந்தோறும் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு நச்சரித்து வருகின்றனர். போனிகபூரும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், அசராமல் அமைதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன்னர் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ என்ற இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ’பொல்லாதவன்’ படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து கடுப்பான அஜித் ரசிகர்கள் ’நாங்கள் தினந்தோறும் கேட்டுக் கொண்டிருக்கும் வலிமை படத்தின் அப்டேட் தராமல் ஏதோ ஒரு படத்தின் அப்டேட்டை தந்து கொண்டிருக்கிறார் இந்த போனிகபூர்’ என்று மீண்டும் திட்ட ஆரம்பித்துள்ளனர். அஜித் ரசிகர்களுக்கு பயந்தே விரைவில் வலிமை குறித்து அப்டேட்டை போனிகபூர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…