
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒ’ன் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. சில திரைப்படங்களில் சிறுமியாக சின்ன சின்ன வேடத்தில் நடித்துள்ளார்.
அதன்பின் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என ரசிகர்களை கவர்ந்தார். 100 நாள் வரை தாக்குபிடித்த அவர் திடீரென ரூ.5 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி தவறான முடிவை எடுத்தார்.

அதன்பின் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், செம க்யூட்டாக போஸ் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஹார்ட்டின் சிம்பிளை பதிவிட்டு வருகின்றனர்.






