More

3 படம் ஸ்ருதி ஹாசன் மாதிரி திடீரென கெட்டப் சேன்ஞ் பண்ணிய கேபி!

தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்த கேபிரில்லா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இவரின் செயல்பாடு எல்லோரையும் கவர்ந்தது. 

Advertising
Advertising

யாருடனும் பெரிதாக சண்டை போடாமல், வெறுப்பை சம்பாதிக்காமல் விளையாடிய விதம் ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. ஆனால், திடீரென யாரும் எதிர்பார்த்திராதபடி ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது குட்டி பொண்ணு போல கவர்ச்சி காட்டாமல் டீசண்ட்டா ட்ரஸ் போட்டு கியூட்டா போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த லுக் 3 பட ஸ்ருதி ஹாசன் போன்று உள்ளதாக ரசிகர்கள் அனைவரும் கமெண்ட் செய்து கேபிக்கு லைக்ஸ் குவித்துள்ளனர். 

Published by
adminram