இந்த முறை இதை அனுமதிக்கக்கூடாது என ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் கொரொனா வேகமாக பரவும் காலத்தில் ஊர்வலம் செல்ல அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரரவிட்டு விட்டது. அதே உத்தரவை தமிழக அரசும் பிறப்பித்து விட்டது. இது, பாஜகவினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தடையை மீறி ஊர்வலம் செல்வோம் என இந்து அமைப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலையை நீர் நிலைகளில் தனி நபராக சென்று கரைக்கலாம். ஆனால், குழுவாகவோ, அமைப்பாகவோ செல்ல கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் வினாயகரை வைத்து வழியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…