இன்று விநாயகர் சதுர்த்தி. தமிழ்சினிமாவில் விநாயகர் பற்றிய படங்கள் பல வந்துள்ளன. அவற்றில்
பிள்ளையார் முக்கியமான படம். இதில் அருண்குமார், ராதா, ஒய்.ஜி.மகேந்திரன், மேஜர் சுந்தரராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி படத்தில் என்டி.ராமராவ், ஜமுனா, கிருஷ்ணகுமாரி உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் பால கணேஷ் என்ற கார்டூன் படம் செம சூப்பராக இருந்தது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வெற்றி விநாயகர் படத்தைப் பற்றி சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.
1996ல் வெளியான படம் வெற்றி விநாயகர். கே.சங்கர் இயக்கிய இப்படத்தில் கே.ஆர்.விஜயா, ராதாரவி, ஊர்வசி, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
எம்.சரோஜினி தேவி தயாரிப்பில் ம.சு.விசுவநாதன் இசை அமைத்தார். இந்தப்படம் இந்தியில் ஜெய் கணேஷ் தேவா என்றும், தெலுங்கில் ஓம் கணபதி என்றும் வெளியானது.
ஜகனாதே விக்னேஸ்வர, மதனே ரதியா என்னிடாயே, ஓம்காரா ரூபத்தில் பொருளானவன், இந்த மாட்டுக்காரன் பாட்டு பாடுவான், பூதத்தெல்லம் கைசிந்து, நித்யா சுமங்கலி ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
விநாயகர் பெருமான் காவிரி நதியை தமிழகத்திற்கு கொண்டு வர காகமாக மாறி முனிவரின் கமண்டலத்தைத் தள்ளிய படலம் படத்தில் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. அகத்திய முனிவர் இதை விவரிக்கிறார்.
மாடு மேய்க்கும் சிறுவன் பாட்டு பாடி போடும் ஆட்டம் ரசிக்க வைக்கிறது. இந்த மாட்டுக்காரன் பாட்டு பாடுவான் எனத் தொடங்கும் அந்தத் தத்துவப்பாடலில் உள்ளார்ந்த வரிகள் இக்காலத்திலும் பொருந்தக்கூடியவை என்பது நிதர்சனமான உண்மை.
கோபுரத்தைத் தாங்குவது யாரு? அதில் இருக்கும் பொம்மைகளா? இல்லை. இறை அருள் தான் எனவும் இல்லற சுகத்தில் அழகான பத்தினி போன்ற மனைவி இருந்தும் தப்பு பண்ணுகிறான் மனிதன் என பாடல் போலி வாழ்க்கை வாழும் மனித சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
படத்தில் வரும் காட்சிகள் புராணகால சம்பவங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் போது பார்வையாளர்களை இருக்கையுடன் கட்டிப் போடுகிறது வெற்றி விநாயகர் படம்.
விபீஷணன் காவிரி நதிக்கரையில் நீராடச் செல்லும் முன் சிறுவனிடம் ஸ்ரீரங்கநாதனை வைத்திருக்குமாறு சொல்கிறார். அப்போது சிலையை கீழே வைத்து விடாதே என கூறுகிறார். ஆனால் கை வலித்தால் கீழே வைத்து விடுவேன் என்கிறார். அப்போது 3 முறை உம்மை கூப்பிடுவேன்.
வராவிட்டால் கீழே வைத்து விடுவேன் எனவும் சிறுவன் எச்சரிக்கிறான். அதன்படியே செய்தும் விடுகிறான். விபீஷணன் பதறியபடி ஓடோடி வந்து சிலையை எடுக்க முயல்கிறான். ஆனால், முடியவில்லை.
அப்போது விநாயகர் அவன் முன் தோன்றுகிறார். இது அகத்தியரின் விருப்பம். அதன்படி நான் ஆடிய திருவிளையாடல் தான் இது. ஸ்ரீரங்கநாதர் திருச்சியில் பள்ளி கொள்ள விரும்புகிறார் என்றும் அவருக்கு இங்கு தலம் அமைக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதன்படி, திருச்சியில் காவிரி நதிக்கரை ஓரத்தில் ஸ்ரீரங்கம் அமைந்து விட்டது.
அப்போது அகத்தியர் அவ்விடம் வந்து விநாயகரிடம் சைவ வைணவ திருத்தலங்கள் இங்கு அமைய தாங்கள் தான் காரணம் என சொல்கிறார். இதைக் கேட்ட விபீஷணனும் தன் வேண்டுகோளின்படி உச்சிப்பிள்ளையாராக நீங்கள் இங்கு வீற்றிருக்க வேண்டும் என கூறுகிறார். அப்படியே ஆகட்டும் என்கிறார் விநாயகர்.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை போரடிக்காமல் செல்கிறது. அதுதான் பக்திப்படம் என வெற்றி பெற்றிருக்கிறார் பெயரிலேயே உள்ள வெற்றி விநாயகர்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…