கர்ப்பிணியை காரில் கடத்தி சென்று கற்பழிப்பு - கடலூரில் கொடூரம்

by adminram |

4f04fd90c55fb8f7568a1de82f5fa839

கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு 2 குழந்தைகள் உண்டு. இவரின் மனைவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் தனது மனைவியுடன் இரவு சினிமா பார்த்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒரு கும்பல் அந்த நபரை சரமாரியாக தாக்கிவிட்டு அவரின் மனைவியை மட்டும் காரில் கடத்தி சென்றனர். அதன்பின் கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அதன்பின் அப்பெண்ணை அவரின் வீட்டின் அருகே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் அவர்கள் 4 பேரும் திருப்பாதிரிப்புலியூர் மார்கெட் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story