பிரபல இசையமைப்பாளரை பாஜகவில் இணைத்துவிட்ட கங்கை அமரன்!

தமிழகத்தில் பாஜகவை வளர்க்க திரையுலக பிரமுகர்களை கட்சியில் இணைக்கும் நடவடிக்கையில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜகவில் கங்கை அமரன், பொன்னம்பலம், காயத்ரி ரகுராம் உள்பட பலர் இணைந்துள்ள நிலையில் சமீபத்தில் ராதாரவி மற்றும் நமீதா ஆகிய இருவரும் பாஜகவில் இணைந்தனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு நமீதா, ராதாரவி ஆகிய இருவரும் பெருமளவு உதவுவார்கள் என்றும் இதனால் பாஜகவிற்கு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் பாஜகவில் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ் இணைந்துள்ளார். இவரை கங்கை அமரன் தான் அழைத்து வந்து பாஜகவில் இணைத்துவிட்டதாக கூறப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் பாஜகவின் உறுப்பினர் அட்டையை பரத்துவாஜ் அவர்கள் பெற்றுக்கொண்ட போது அருகில் இசையமைப்பாளர் கங்கை அமரன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னும் பல திரையுலக பிரமுகர்கள் பாஜகவில் இணைக்க கங்கை அமரன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 

மொத்தத்தில் பாஜக தமிழகத்தில் கட்சியை வளர்க்க திரையுலக பிரமுகர்களை அதிகம் இழுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்றும் வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் பாஜகவில் பல திரையுலக பிரமுகர்கள் இணைவார்கள் என்று கூறப்படுகிறது

Published by
adminram