
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தில் இணைந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்ள இருக்கிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிவரும் ’மூக்குத்தி அம்மன் என்ற’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் இளம் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் யாஷிகா இணைந்துள்ளனர். இதனை உறுதி செய்வது போல் ஆர்ஜே பாலாஜியுடன் யாஷிகா மற்றும் கௌதம் கார்த்திக் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவர்கள் இருவரும் இந்த படத்தில் கெளரவ வேடத்தில் தான் நடித்து வருவதாக படகுழுவினர்கள் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது
மேலும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒருசில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணி தொடங்கிவிடும் என்றும், அதனையடுத்து வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படம் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது