விஷ்ணுவிஷாலுடன் முதல்முறையாக இணைந்த கவுதம்மேனன்!

’ராட்சசன்’ மற்றும் ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய இரண்டு வெற்றித் திரைப்படங்களில் கடந்த ஆண்டு நடித்த விஷ்ணு விஷாலுக்கு இந்த ஆண்டு ஒரு திரைப்படம் கூட வெளிவரவில்லை என்றாலும் அவர் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஜெகஜ்ஜால கில்லாடி மற்றும் எப்.ஐ.ஆர் ஆகிய இரண்டு படங்களில் விஷ்ணுவிஷால் நடித்து வருவதாகவும், சிலுக்குவார்பட்டி சிங்கம்’ இயக்குனர் செல்லா அய்யாவுவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் விஷ்ணுவிஷால் நடித்து வரும் ‘எப்.ஐ.ஆர்.’ படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், இந்த கேரக்டர் படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து விஷ்ணுவிஷாலுடன் கெளதம் மேனன் முதல்முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

ஏற்கனவே இயக்குனர் கெளதம்மேனன், ‘குயீன்’, ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் பிசியாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram