கெளதம் மேனனின் "குட்டி லவ் ஸ்டோரி" புரோமோ வீடியோ!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பல ஹீரோக்கள் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சான்ஸிற்காக காத்திருப்பார்கள். அந்தவகையில் தமிழ் இயக்குனர்களிலேயே சற்று வித்யாசமாக , ஸ்டைலீஷாகப் படம் பண்ணுபவர் கெளதம் வாசுதேவ் மேனன்.
இவரது இயக்கத்தில் வெளியான காக்க காக்க, வாரணம் ஆயிரம், மின்னலே வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா’ இப்படி தான் இயக்கிய அத்தனை படத்திலும் அந்தந்த காதலுக்கு உயிர் கொடுத்து உருவாக்கியிருப்பர். இந்நிலையில் இந்த கொரோனா லாக்டவுனில் ’கார்த்திக் டயல் செய்த எண்’ , ஒரு சான்ஸ் கொடு , என தொடர்ந்து தனது கலை திறமைகளை குறும்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது "குட்டி லவ் ஸ்டோரி" என்ற அழகிய குறும்படத்தின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை கெளதம் மேனனுடன் வெங்கட் பிரபு , நாலன் குமாரசாமி மற்றும் ஏ. எல் விஜய் ஆகியோர் இணைந்து இயக்கயுள்ளனர். இதோ அந்த வீடியோ..