கவுதம் மேனனின் அடுத்த அவதாரம்: கோலிவுட் திரையுலகம் ஆச்சரியம்!

Published on: January 28, 2020
---Advertisement---

056919801ccf416ba768f3b57c064c2d

கோலிவுட் திரையுலகில் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமாக இருந்து வருபவர் கவுதம்மேனன் என்பது தெரிந்ததே. தற்போது இவர் இயக்கி வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சி படமான ’குயின்’ என்ற வெப்சீரியல் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதுபோக அகவுதம்மேனன் வர் தற்போது இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அதுமட்டுமின்றி  இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது பாடகராகவும் மாறியுள்ளார். சித்தார்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் டக்கர் என்ற திரைப்படத்தில் பிரபல பாடகர் சித்ஸ்ரீராம் உடன் இணைந்து கவுதம்மேனன்  ஒரு பாடலை பாடியிருக்கின்றார். இந்தப் பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்திற்காக சிம்பு மற்றும் ஆண்ட்ரியா பாடிய பாடல் வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment