கார்த்திக்:
நவரச நாயகன் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய அப்பா குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். சமீபகாலமாக நடிகர் கார்த்திக்கை பற்றி பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தயாரிப்பாளர்கள் கார்த்திக்கால் பட்ட கஷ்டம் மற்றும் அவருடைய உடல் நலம் குறித்த பல்வேறு கருத்துக்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.
இதைப் பற்றி கௌதம் கார்த்திக் சமீபத்திய ஒரு பேட்டியில் விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார். கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கௌதம் கார்த்திக் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அவருக்கு உண்டான அந்த அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. அவருடைய அப்பாவை பொறுத்த வரைக்கும் 90 காலகட்டத்தில் டாப் நடிகராக இருந்தவர். அதைப்போல கௌதம் கார்த்திக்கின் தாத்தாவும் நடிகருமான முத்துராமன் எப்பேர்பட்ட ஒரு பழம்பெறும் நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும்.
போராடும் பேரன்:
அவரும் ஒரு முன்னணி நடிகராக இருந்தவர். அதன் வழி வந்த கௌதம் கார்த்திக் மட்டும் இன்னும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறார். இந்த நிலையில் தன் அப்பா குறித்த விமர்சனத்திற்கு இங்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவருடைய உடல் நலம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவருக்கு இப்போது வயதாகிக் கொண்டிருக்கின்றது. அதனால் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை கட்டாயமாக செய்ய வேண்டும் .
அப்படி போகும் பொழுது மருத்துவமனையில் நடந்து செல்லவும் அல்லது படியேறி நடக்கவும் அவரால் முடியாத காரணத்தினால் அங்கு ஒரு வீல் சேர் கொடுக்கப்பட்டது. அதில் உட்கார வைத்து அவரை அழைத்துச் சென்றோம். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஏதேதோ அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அவர் நன்றாக இருக்கிறார். அவருடைய உடல் நலமும் நன்றாக இருக்கிறது.
கஷ்டமாக இருக்கிறது:
எப்பவும் போல ரசிகர்களை இன்னும் அவர் நேசித்து வருகிறார் என கௌதம் கார்த்திக் கூறியிருக்கிறார். அதுபோல அவருடைய கால்ஷீட் பிரச்சினை மற்றும் தயாரிப்பாளர்கள் கார்த்திக்கால் பட்ட கஷ்டம் இதைப் பற்றியும் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இதை நேரடியாகவே பேசி இருக்கலாம் .இப்படி சமூக வலைதளத்தை பயன்படுத்தி பேசியது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதற்காக சமூக வலைதளத்தை பயன்படுத்தி இருக்கலாம் .குரல் கொடுத்திருக்கலாம். இந்த மாதிரி விஷயங்களை நேரடியாகவே பேசி இருக்கலாம் என கௌதம் கார்த்திக் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…