">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வெளிய வந்தா போலீஸ் அடிக்கத்தான் செய்வாங்க! – காவல்துறைக்கு சுரேஷ்கோபி ஆதரவு
கொரானா பாதிப்பு பரவக்கூடாது என இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பலரும் அதை மதிக்காமல் இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்களில் வெளியே வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதில் சிலருக்கு தடியடி கிடைக்கிறது. சிலர் எச்சரித்து அனுப்பப்படுகின்றனர். பலர் மீது போலீசார் வழக்கும் பதிவும் செய்யப்படுகிறது. மேலும், தோப்புக்கரணம் போடுவது, மஞ்சள் தண்ணீர் ஊற்றுவது என போலீசார் நூதன தண்டனைகளை கொடுத்து வருகின்றனர். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தாலும் சிலர் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மலையாள இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் சுரேஷ்கோபி ‘ஊரடங்கை மீறுபவர்களை முக்கிய உறுப்புகள் பாதிக்காமல் போலீசார் அடிப்பதில் தவறில்லை. அடித்தால்தான் சிலர் கேட்பார்கள். இதற்காக போலீசாரை திட்டக்கூடாது. அவர்கள் மக்களுக்காகவே வேலை செய்கிறார்கள். அவர்களின் சேவையை பாராட்ட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.