காதலி போனதால் அவரின் தங்கைக்கு ஆபாச மெசேஜ் ! கோவையில் சிக்கிய காமுகன் !

கோவையைச் சேர்ந்த ரூபன் தன் காதலி தன்னை விட்டு பிரிந்ததால் அவரது தங்கையின் மொபைலுக்கு ஆபாச மெஸேஜ்கள் அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த ரூபன் என்ற ஒரு பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது காதலி பிரிந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ரூபன் தங்களது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய போவதாக சொல்லி மிரட்டியுள்ளார்.

ஆனால் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாத அந்த பெண் அவரின் தொடர்பைத் துண்டித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் தங்கையின் மொபைலுக்கு அழைத்த ரூபன், அவருக்கு ஆபாச மெஸேஜ்கள் அனுப்பியது மட்டும் இல்லாமல் ஆபாசப் புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து அவர் தனது பெற்றோர் மூலம் போலிஸில் புகாரளிக்க தற்போது போலிஸார் ரூபனைக் கைது செய்துள்ளனர்.

Published by
adminram