18 வயதை கூட எட்டாத சிறுமிகள்.. விஐபிகளுக்கு சப்ளை….ஆம்பூரில் அதிர்ச்சி

Published on: February 3, 2020
---Advertisement---

bf8b02ecc20e7c0b0583fc48663510f4

ஆம்பூர் அடுத்துள்ள உமராபாத் பகுதியில் உள்ள விடுதிகள் மற்றும் தனி வீடுகளில் வெளிமாநில அழகிகளை வைத்து விபச்சாரம் செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. எனவே, அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் பிரேமா என்பவை கைது செய்தனர்.

அவர் அப்பகுதியில் அதிமுக பிரமுகராக இருந்து வருகிறார். மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் வெளிமாநிலங்களிலிருந்து இளம்பெண்களை வரவழைத்து ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்ள விஐபிக்களுக்கு பெண்களை அனுப்பி வந்துள்ளார். அதில் பலர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவரை கட்சியை விட்டு நீக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.     

Leave a Comment