தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே ராஜன் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்ச்சையான மற்றும் அதிரடியான பேச்சுகளுக்கு சொந்தக்காரர் தயாரிப்பாளர் கே ராஜன். வகை தொகை இல்லாமல் அனைவரையும் விமர்சிக்கும் அவர் இப்போது தமிழக அரசையும் விமர்சனம் செய்துள்ளார்.
பூதமங்கலம் போஸ்ட் என்ற புதிய படம் முழுக்க முழுக்க புதுமுகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட கே ராஜன் பேசியது சர்ச்சைக்கும் வரவேற்புக்கும் ஆளாகியுள்ளது.
மேடையில் பேசிய அவர் படம் வெற்றி பெற வாழ்த்திவிட்டு தமிழக அரசை விமர்சிக்கும் விதமாக ஒரு கருத்தைப் பேசினார். அவர் ‘ தமிழக அரசிடம் காலில் விழுந்து கேட்கிறேன். டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். வருமானத்துக்கு வேறு ஏதாவது வழியைப் பாருங்கள். நீங்களே தாலிக்குத் தங்கத்தை கொடுத்து பின்னர் நீங்களே அறுக்காதீர்கள். டாஸ்மாக்குகளால் இன்று பெண்களும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்’ எனத் தெரிவித்தார்.
தமிழக அரசு, டாஸ்மாக், கே ராஜன், தயாரிப்பாளர், tamilnadu govt, tasmac, K rajan
Producer requested tamilnadu govt to shut Tasmac
Lucky Bhaskar:…
தனது வருங்கால…
Rajinikanth: தமிழ்…
நடிகர் திலகம்…
நடிகர் பிரதீப்…