More
Categories: Cinema News latest news

கோட் படத்திற்கு வில்லன் யுவனா? ஆடியோ லாஞ்சே வேணாம்னு ஒதுக்கிய விஜய்?

துள்ளுவதோ இளமை, பில்லா, பிரியாணி, வலிமை, விருமன், கருடன் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. இவர் தற்போது இசை அமைத்து வரும் படம் தளபதி விஜய் நடிக்கும் கோட். இந்தப் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு. விஜயின் 68 வது படமாக வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தில் விசில் போடு, சின்ன சின்ன கண்கள், ஸ்பார்க் என 3 சிங்கிள்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. பாடல்கள் எப்படி உள்ளன என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர். விஜய் படம் என்றாலே பாடல்களில் குத்தாட்டத்திற்குப் பஞ்சம் இருக்காது. அப்படித்தான் பாடல்களும் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

Advertising
Advertising

அந்த வகையில் விசில் போடு பாடலுக்கு பெரும் சர்ச்சைகள் எழுந்தன. அதாவது பாடலில் மது மற்றும் பார் பற்றி வரிகள் வருகிறது. ‘பார்ட்டி ஒண்ணு தொடங்கட்டுமா’ என்று ஆரம்பிக்கும் பாடலில் ‘குடிமகன் தான் நம்ம கூட்டணி’ன்னு வரிகள் வருது. அது மட்டுமல்லாமல ‘லாஸ்ட் சொட்டு உள்ள வரை நம்ம பார்ட்டி ஓயாது’ன்னு வேற அதுல சொல்றாங்க. இதனால் இப்படியும் ஒரு பாடலான்னு சமூக ஆர்வலர்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து கபிலன் வைரமுத்துவின் வரிகளில் ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற 2வது சிங்கிள் வெளியானது. இது ஏஐ தொழில்நுட்பத்தில் பவதாரிணி பாடுவதாக வடிவமைக்கப்பட்டது. இதற்கு பெரிய அளவில் விமர்சனங்கள் எழ வில்லை. பாடலும் மெலடி ரகமாக அருமையாக இருந்தது.

அடுத்ததாக வந்தது தான் 3வது சிங்கிள். ‘அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்’குன்னு வந்தது அந்தப் பாடல். கமெண்ட்ஸைப் போய் பார்த்தால் இந்தப் படத்திற்கு வில்லன் யுவன் தான்னு போட்டுருக்காங்க.

கோட் படத்தில் பாடல்கள் சுமார் தான். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கி விட்டது. அதற்காக யுவன் பாடல்களில் அதிரடியாக மாற்றங்கள் செய்து இருக்கலாம் என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன்.

2 மாசத்துக்கு முன் விசாரிக்கும்போது பாடல்கள் எல்லாமே சுமாராகத் தான் வந்துருக்குன்னு சொன்னாங்க. அனிருத் போடுற மாதிரி எல்லாம் யுவன் மியூசிக் போடவில்லைன்னு தான் சொன்னாங்க. ஆனா இப்போ யுவன் மேல விமர்சனம் ரொம்ப கடுமையா வந்துடுச்சு. உன்னால முடியலைன்னா போக வேண்டியது தானே. ஏன்யா எங்க தலைவரை இப்படி காலி பண்றேன்கற அளவுக்கு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க.

அப்படின்னா நாம சாங்கை கொஞசம் மாற்றிக் கொடுக்கணும்னு அவர் பிளான் பண்ணி அதே பாடல்களைக் கொஞ்சம் மாற்றி அமைச்சிருக்க வாய்ப்புகள் இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பாடல்கள் ரசிகர்களை பெரிதும் ஈர்க்காததால் இந்தப் படத்திற்கு ஆடியோ லாஞ்சே இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

Published by
ராம் சுதன்