More
Categories: Cinema News latest news

விஜய்னா மாஸ்!.. தமிழ்நாடு மட்டும் இத்தனை கோடியா?!.. அடிச்சி தூக்கிய கோட் பட வியாபாரம்!…

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம்தான் கோட். லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற பின் விஜய் நடிக்கும் படம் இது. அப்பா – மகன் என இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதற்கும் முன்பும் விஜய் இப்படி சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

ஏனெனில் ஒரே நேரத்தில் அப்பா மகன் மற்றும் இளம் வயது விஜய் என தொழில்நுட்பத்தில் விளையாடி இருக்கிறார்கள். ஏஜிங் டெக்னாலஜி மூலம் விஜயை 20 வயது இளைஞராக காட்டி இருக்கிறார்கள். இதற்காக ஹாலிவுட் கலைஞர்கள் பல நாட்கள் வேலை செய்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா என பலரும் நடித்திருக்கிறார்கள். பல வருடங்களுக்கு பின் விஜயின் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதுவரை 2 பாடல்கள் வெளிவந்திருக்கிறது. இதில் ஒரு பாடலில் மறைந்த பாடகி மற்றும் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் குரலை ஏஐ டெக்னாலஜி மூலம் கொண்டு வந்திருக்கிறார்கள்.

எனவே, இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது. விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில் இப்படம் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கோட் படத்தின் வியாபாரம் சூடுபிடிக்க துவங்கி இருக்கிறது. இதில் தமிழக உரிமை மட்டும் 88 கோடிக்கு விலை போயிருக்கிறது. தற்போது முக்கிய படங்களை வினியோகம் செய்யும் உரிமை வாங்கும் ராகுல் என்பவர்தான் தமிழ்நாட்டு உரிமையையும் வாங்கி இருக்கிறார்.

அதுவும் மினிமம் கேரண்டி அடிப்படையில் கோட் படத்தை அவர் வாங்கி இருக்கிறார். இன்னும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மும்பை ஆகிய ஏரியாக்களின் உரிமைகள் மற்றும் சேட்டிலைட், ஓடிடி, ஆடியோ உரிமை பல வியாபாரங்கள் இருக்கிறது. மொத்தத்தில் கோட் படத்தின் வியாபாரம் பல கோடிகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
ராம் சுதன்