இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்ட நல்ல பாம்பு – நீண்ட போராட்டத்துக்கு உயிருடன் மீட்பு !

Published On: December 14, 2019
---Advertisement---

8957f549046ab54054d93787388b7ccf

தென்காசி மாவட்டத்தில் சக்திவேல் என்பவரின் இரு சக்கர வாகனத்தில் புகுந்துகொண்ட பாம்பை தீயணைப்புத் துறையினரின் லாவகமாக உயிருடன் பிடித்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள  மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனது வீட்டுக்கு வெளியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அப்போது சிறிய பாம்பு ஒன்று அவரது வாகனத்தில் தஞ்சம் புகுந்துள்ளது. அதை அவர் எடுக்க முயல பாகங்களுக்கு இடையில் சென்று மறைந்துள்ளது.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் சொன்னார் சக்திவேல். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு இருசக்கர வாகனத்திலிருந்து பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பாம்பை வனப்பகுதியில் சென்று விட்டனர்.

Leave a Comment