Cinema News
சூட்டிங்கில் அந்த வார்த்தைய சொல்லி கமலை கேலி பண்ண கவுண்டமணி.. பல நாள் கோபத்தில் இருந்த உலகநாயகன்..!
சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கவுண்டமணி கமலஹாசனை கேலி செய்துள்ளார். இதனால் கமலஹாசன் கவுண்டமணியிடம் பேசவே இல்லையாம்.
தமிழ் சினிமாவில் உலகநாயகன், ஆண்டவர் என்று செல்ல பெயர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் கமலஹாசன். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இடையில் அரசியலில் பயணம் செய்து வந்த கமலஹாசன் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். விக்ரம் திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்து தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர்கள் இருவரின் காமெடிகள் தற்போது வரை பிரபலமாக இருக்கின்றது. கவுண்டமணி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர்.
கவுண்டமணியின் நகைச்சுவை எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவுக்கு விமர்சனத்தையும் கொடுத்தது. உருவ கேலி செய்வது, எட்டி உதைப்பது என்ற வன்முறையை நிகழ்த்துகிறார் என பலரும் பலவிதமாக பேசி வந்தார்கள். எவர்கிரீன் கூட்டணி என்றால் அது கவுண்டமணி செந்தில் தான். இவர்களின் காம்போவில் வெளிவந்த பல படங்கள் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
ஆனால் கவுண்டமணி ஒரு சில திரைப்படங்களில் தனியாகவும் நடித்திருக்கின்றார். கமலஹாசன் உடன் இணைந்து கவுண்டமணி பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தார். அப்படி சிங்காரவேலன் படப்பிடிப்பில் கமலஹாசன் நடித்துக் கொண்டிருந்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ரசிகர்கள் பலரும் செந்தில் வரவில்லையா என்று கவுண்டமணி இடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதில் அளித்த கவுண்டமணி வெள்ளை செந்தில்தான் இருக்கின்றார் என்று கமலை குறிப்பிட்டு கூறியிருக்கின்றார்.
இதையறிந்த கமல் கவுண்டமணி மேல் பல நாள் கோபத்தில் இருந்தாராம். இதனால் இளையராஜாவிடம் சொல்லி கவுண்டமணி மன்னிப்பு கேட்டால் தான் நான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று சொல்லிவிட்டார். பின்னர் கவுண்டமணிக்கு இந்த விஷயங்கள் தெரிய வர சூட்டிங்கில் பல மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற ‘கமல் சார் உங்களை வெள்ளை செந்திலென்று கேலி செய்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்’ என்று மீண்டும் மீண்டும் கூறியிருந்தாராம். இதற்கு பிறகு தான் இருவரும் சமாதானம் ஆகி இருக்கிறார்கள்.