
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடனுதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ரூ. 6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர்கள் திருமண செலவுக்காகவும், புதிய பைக், கார் வாங்கவும் கடனுதவி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





