முதன் முறையாக வில்லேஜ் சப்ஜெக்ட்.. ரிஸ்க் எடுக்கிறாரா கவுதம் மேனன்?...
தமிழ் சினிமாவில் ‘மின்னலே’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகானவர் கவுதம் மேனன். காக்க காக்க திரைப்படம் மூலம் ஸ்டைலீஸான இயக்குனராக மாறினார். வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் என இவரின் திரைப்படங்களில் காதல் துள்ளி விளையாடும். ஆக்ஷன் படம் என்றாலும் காதல் வசனம் ரசம் சொட்டும். அதேபோல், அவரின் திரைப்படங்களில் ஆங்கில வசனங்கள் அதிகம் வரும். எனவே, தமிழில் ஹாலிவுட் படம் எடுக்கும் இயக்குனர் என சினிமா வட்டாரத்தில் இவரை கிண்டலடிப்பதுண்டு.
இந்நிலையில்தான், தற்போது சிம்புவை வைத்து ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கவுள்ளார் கவுதம் மேனன். முதன் முறையாக இப்படத்தில் கிராம கதையை அவர் இயக்கவுள்ளார். அதிலும், சிம்பு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். அவருக்கு இப்படத்தில் வெட்டியான் கதாபாத்திரம் எனக்கூறப்படுகிறது. இது உண்மையா என தெரியவில்லை. இதற்கு முன் கவுதம் மேனன் இயக்கியது எல்லாமே நகரம் சார்ந்த கதைதான். எனவே, இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.