அனல் பறக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ புதிய போஸ்டர்... பெரிய சம்பவம் ஒன்னு இருக்கு!..

by adminram |

7971a1770a80e5e10e32659cd57675b8-2

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இது சிம்புவின் 47வது திரைப்படமாகும்.

435f8d1cd4787f60ebf29f183d738725-1

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில நாட்களுக்குக் முன்பு வெளியானது. இப்படத்திற்கு பாரதியாரின் பாடல் வரிகளில் ஒன்றான ‘வெந்து தணிந்தது காடு’ என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் சிம்பு இதுவரை பார்த்திராத தோற்றத்தில் நிற்கிறார். இந்த போஸ்டர் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படம் தொடர்பான அடுத்த போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் அமர்ந்திருப்பது போல் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப்பார்க்கும் போது படத்தில் பெரிய சம்பவம் இருக்கிறது என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

8c767d60ef9c09f0c9c0565178ad46f9-5

Next Story