பிக்பாஸ் 5வது சீசனில் ஜி.பி.முத்து – வெளியான புகைப்படம்

டிக் டாக் செயலி மூலம் பலர் வைரலாக மக்களிடம் புகழ் பெற்றனர். அதில், குறிப்பிட்டவர் ஜிபி முத்து. டப்ஸ்மாஸ் மற்றும் காமெடியான வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். டிக்டாக்-கிற்கு தடை விதிக்கப்பட்டவுடன் முகநூல், யுடியூப் வழியாக வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இவர் பேசும் தூத்துக்குடி பாஷைக்கென்றே இவருக்கு ரசிகர் கூட்டம் உருவானது.

ரவுடி பேபி சூர்யாவுடன் இணைத்து பேசப்பட்டார். தொடர்ந்து, பல சர்ச்சைகளை சந்தித்தவர். குடும்ப பிரச்சனை மற்றும் தீராத வயிற்று வலியால் தற்கொலைக்கு முயன்றார். அதன்பின் அதிலிருந்து மீண்டார். தற்போது சில திரைப்படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அவர் பங்குபெறவுள்ளார். இந்த தகவலை அவரே தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘நண்பர்களே உங்கள் ஆதரவுடன் நான் பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல போகிறேன் ஆதரவு தாருங்கள் நண்பர்களே’ என பதிவிட்டுள்ளார்’. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Published by
adminram