குக் வித் கோமாளி 3வது சீசனில் ஜி.பி.முத்து? – கசிந்த செய்தி

Published on: June 12, 2021
---Advertisement---

7c30789db4c41caf1bcc7c4579a7999f

டிக்டாக்கில் டப்ஷ்மாஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ஜி.பி.முத்து, டிக்டாக் தடை செய்யப்பட்டபின் யுடியூப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரை கலாய்க்க கண்டதையும் பலரும் பார்சலில் அனுப்ப, அதையே யுடியூப்பில் வீடியோவாக போட்டு பிரபலமடைந்தார். இவரை லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். 

cc636d52cfbf831aaffbe30392346cad

இந்நிலையில், விஜய் டிவியில் புகழ் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி.பி.முத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.

ஏற்கனவே சிவாங்கி, புகழ், ஜி.பி.முத்து என பலரும் இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தனர். 2 சீசன் முடிந்துள்ள நிலையில், 3வது சீசன் துவங்கவுள்ளது. இதில், ஜி.பி.முத்து கலந்து கொண்டார் நிகழ்ச்சி களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Comment